வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

தூத்துக்குடி - கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்

ரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது
.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’