வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதாக விநாயகமூர்த்தி எம்.பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் மக்கள் குற்றவாளிகளைப்போல நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு படையினரால் புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்
.அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கே.பிக்கு சுதந்திரமாக வாழ அரசாங்கம் இடமளிக்குமானால் சிறு குற்றங்கள் இழைத்தோரை ஏன் விடுதலை செய்ய முடியாது? ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் அரச பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டார்கள்.
மக்களுக்கு இன்று மூன்றுவேளை உணவு உண்ண முடியவில்லை. ஆனால் அரசாங்கமோ அவசியமற்ற விழாக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகிறது. இவ்வாறான அடக்குமுறை தொடருமானால் எகிப்தில் ஏற்பட்ட நிலை தான் தோன்றும்" என அவர் மேலும் தெரிவித்தார்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’