இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம் நேற்றுக்கொண்டாடப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டன
.கிளிநொச்சி, வவுனியா மாவட்ட செயலாளர் வளாகங்களில் மழைக்கு மத்தியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று கொண்டாடப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொலிஸார் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.50 மணியளவில் தேசியக் கொடியேற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டதாக யாழ்.அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
தேசிய கீதத்துக்கான இசை மாத்திரம் போடப்பட்ட நிலையில் சுதந்திர நிகழ்வு கொண்டாடப்பட்டதாகவும் இதில் வடமாகாண சபை செயலாளர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை முல்லைத்தீவிலும் சுதந்திர தின நிகழ்வு மழை காரணமாக அமைதியான முறையில் நடைபெற்றது.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முல்லைத் தீவு மாவட்ட செயலக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அத்துடன் மன்னாரிலும் நேற்று காலை மாவட்ட செயலக வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது அத்துடன் மாவட்ட செயலக வளாகத்தில் 15 பயன் தரும் மரங்கள் நடப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’