தனது கணவருக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பெண்ணொருவர் சென்னை பொலிஸாரிடம் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்று செய்துள்ளார்.
இது தொடர்பில் சென்னை பொலிஸார் தெரிவிக்கையில்,
வவுனியாவை சொந்த இடமாகக் கொண்ட 26 வயதான திஹன என்ற இப்பெண் இலங்கையைச் சேர்ந்த 25 வயதான ராகுலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்;டார். கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சென்னைக்கு வந்திருந்த இப்பெண்ணின் கணவரான ராகுலன் குறித்த திகதியில் திரும்பிச் செல்லவில்லை. ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொலைபேசி மூலம் அப்பெண்ணுடன் தொடர்புகொண்ட கணவர், மற்றுமொரு பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஆயத்தங்களில் தனது பெற்றோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் தனது பிள்ளைகளுடன் சென்னைக்கு சென்ற அப்பெண் வலசரவக்கம் அன்புநகரிலுள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளபோதிலும், கணவரின் பெற்றோர் வீட்டிற்குள் உள்நுழைவதற்கு அப்பெண்ணை அனுமதிக்கவில்லை. அத்துடன், அவரது கணவரையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென்று அப்பெண் முறைப்பாடு செய்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறைப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு வடபழனி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு சென்னை நகர பொலிஸ் உயரதிகாரி ரி.ராஜேந்திரன் பணித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’