வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடினார்

ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் அசோக் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் ஆகியோர் உட்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நேற்றைய தினம் (8) இரவு சந்தித்து கலந்துரையாடினார்.


கொழும்பிலுள்ள அமைச்சர் அவர்களது வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அத்துடன் யாழ் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் விளையாட்டு வீரர்களையும் ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் அவர்களும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய அவர்களுக்கான பயண மற்றும் உணவு வசதிகளுக்கான நிதி ஜனாதிபதி அவர்களின் மூலம் கையளிக்கப்பட்டது.
இவ்வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய சிரேஷ்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை பாதுகாப்புத் தரப்பு அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் 43 அணிகள் பங்கு பற்றியிருந்தன.
இதன் பின்னர் யாழ் வர்த்தகச் சமூகப் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது யாழ் வர்த்தகச் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி அவர்களது இவ்விஜயத்தின் போது புலிகளால் கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களது புகைப்படங்களையும் பார்வையிட்டார்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’