வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம்: முழு விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படுவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ள அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு கடற்படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் 'இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலரிமாளிகையில் இன்று நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான காலை உணவு விருந்துபசாரத்தின்போது ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் இலங்கைக் கடற்படையினர் இச்சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாடினாரா என கேட்டபோது இல்லை என ஜனாதிபதி பதிலளித்தார்.
இலங்கைப் படைகள் சம்பந்தப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா எனக் கேட்டபோது, இலங்கைக் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என ஆரம்ப விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஆனால் முழுமையான விசாரணை நடத்துமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி இது தொடர்பாக கூறுகையில் , இச்சம்பவம் இந்திய கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். 'அக்கடல் பகுதி ஆழமில்லாதது. எமது அனைத்து கப்பல்களின் நிலைகளும் தரையிலுள்ள கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இதை யாரும் சோதனையிடலாம் எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’