புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 86 விண்ணப்பங்களும் தேர்தல்கள் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமையே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, . என் . ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’