வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

ஐ.நா. உயர் அதிகாரி இலங்கை வருகிறார்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளருமான கதரின் பிராக் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள அவர், 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென ஐக்கிய நாடுகள் அலுவலகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தது.
இலங்கையில் தேவைப்படும் மனித உரிமை நடவடிக்கைகளுக்கும் பலவீனமான மக்களுக்கு ஐ.நா.வின் உதவிப் பொருட்களை வழங்குவதற்கும் கதரின் பிராக்கின் இலங்கைக்கான விஜயம் அமைவதாக ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவரது விஜயத்தின்போது உதவி முகவர் நிலையங்கள், நன்கொடையாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான அவசர நிவாரண நிதியமொன்றும் கதரின் பிராக்கின் விஜயத்தையொட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரதி அவசரகால நிவாரண இணைப்பாளர் கதரின் பிராக்கின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது(

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’