வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 ஜனவரி, 2011

வைகோ போடும் கரணம்…!!! – ஈ.என்.டி.எல்.எப்.

ழத் தமிழரது பிரச்சினையில் நேரடியாகத் தலையிடும் படி ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் துரோகம், வைகோ அவர்கள் மத்திய அரசைச் சந்தித்தால் அது தியாகம்,%%


ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது சோனியாவும், மத்திய அரசும்தான் என்று வாயில் நுரை தள்ள மேடையில் பேசிய வைகோ அவர்கள் அதே வாயில் பற்கள் அனைத்தும் தெரிய இந்திய அரசின் தலைவர் உயர்திரு. மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லி வந்துள்ளார்.%%

தற்போது ஈழத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்திருக்கும் தமிழ் உணர்வாளரான பெண் வழக்கறிஞர் ஒருவர், ஈழத் தமிழர்கள் தமிழகத்துத் தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள், இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கவில்லையென்று சொன்னார்கள். அவருக்கும் விளங்கவில்லை, தமிழகம் என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? அதுவும் இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதிதான்! %%

இந்தப் பெண்ணை விடுவிக்க உதவிய பாரதப் பிரதம மந்திரி அவர்களுக்குத்தான் திரு. வைகோ அவர்கள் நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார்.%%

தனது மக்களுக்கு விசுவாசமும், நேர்மையும் இல்லாத வைகோ அவர்கள் ஈழத் தமிழரின் பிரச்சினையில் மட்டும் வீரம் நிறைந்த மறவர் போன்று நடிப்பதை எங்கள் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்றும் நம்பி ஏமாந்து நிதி வழங்கி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இப்படியான நபர்களை எப்போதோ ஓரம்கட்டிவிட்டனர்.%%

ஒரு எம்.எல்.ஏ. ஆசனம் குறைவாகத் தந்துவிட்டார் என்று தி,மு.க. அணியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு ஓடிச் சென்ற வைகோ அவர்கள் சுயநலவாதியா? பொதுநலவாதியா? இப்படிச் சுய லாபத்துக்காக அலையும் நபரைப் புலிகள் இயக்கம் தங்களது பேச்சாளராக நினைத்து ஏமாந்துள்ளனரா இல்லையா?%%

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் தி.மு.க. கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் போட்ட வேடம்தான் இந்தியா மீது போட்ட பழி. இப்போது கொள்கை வீரனான வைகோ அவர்கள் ஏதோ அரசியல் லாபம் தேடித்தான் பிரதம மந்திரியின் வாயிலைத் தட்டியுள்ளார். கட்சி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.%%

அவரது அரசியல் பற்றி நாங்கள் விமர்சிக்க வேண்டியதில்லை, ஆனால் இவர் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு அவரது அரைகுறை அறிவை வைத்து பட்டங்கள் சூட்டப் புறப்பட்டதைத் தான் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.%%

எந்தக் காங்கிரஸ் தமிழர்களை அழித்ததோ அந்தக் காங்கிரசிடம் நீங்கள் அறிக்கை சமர்ப்பிக்கச் செல்கிறீர்கள் என்று கேட்டவர்கள் இவர்கள். இன்று எங்களையும் முந்திக்கொண்டு விமானத்தில் சென்று நன்றி தெரிவிக்கிறார் இந்தச் சந்தர்ப்பவாதி!%%

ஈழத் தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறோம், இந்தப் போலிகளை நம்பவேண்டாம். எங்கள் இனத்துக்குத் தரகர்கள் தேவையில்லை, உண்மையாக ஈழத் தமிழர்களுக்கு உழைக்கும் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்கு வேட்டை நடத்தும் வேட்டைக்காரர்கள். இவர்கள் என்றும் சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருப்பார்கள்.%%
எது எப்படி இருப்பினும் இறுதியில் இந்திய மத்திய அரசுத்தான் தீர்வுகாண வேண்டும் என்று கதவைத் தட்டிய வைகோ அவர்களை அடையாளம் காட்டிய இந்த நிகழ்வை ஈழத் தமிழர்கள் பாராட்ட வேண்டும்.%%

அரசியல்துறை%%
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி%%
(ஈ.என்.டி.எல்.எப்.)%%



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’