வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 ஜனவரி, 2011

டிலானின் ஆயுதம் ஏந்தாத பொருளாதார வீரர்கள்

வெளிநாடுகளில் தொழில் புரிந்து அதிகளவு செலாவனியை ஈட்டி தருபவர்களே அண்மை காலமாக எமது பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொருளாதார வீரர்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இன்று (நண்பகல் 12 மணி) கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற வெளிநாட்டு வேலைவயர்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களது பிள்ளைகள் 247 பேருக்கு புலமை பரிசில் வழங்கும் வைபவத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது :

கடந்த நான்கு வருடங்களாக தொடர்நது எமது பொருளாதார வளர்ச்சி ஆறு சத வீதத்தை தாண்டி உள்ளது.; வெளி நாட்டில் தொழில் புரிவோரும் இதற்கு காரணமாக உள்ளனர்.
2009 ம் ஆண்டு அமெரிக்கா உற்பட பல நாடுகள் பொருளாதாரத்தில் ஆட்டம் கண்ட பொழுதும் இலங்கை பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அதற்கும் முக்கிய காரணம் வெளிநாடுகளில் தொழில் புரிவபர்களே.
இன்று பாரிய வெற்றியாக பேசப்படுவது 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சம்பவமே ஆகும். ஆனாலும் அதற்கான பொருளாதார பலத்தை எமக்கு தந்ததவர்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களே.
முனைவி, பிள்ளைகள், குடும்பம், உறவு போன்ற அனைத்தையும் இழந்து தமது குழந்தை செல்வங்களுக்காக வெளிநாடுகளில் தொழில் புரிவோரது தியாகத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த அடிப்படையில் இன்று மிக மரியாதை தெரிவிக்கப்படும் யுத்த வீரர்களுக்கு அடுத்த படியாக மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்கள் தனிப்பட்ட நலன்களை தியாகம் செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்து பொருளாதார பலத்தை எமக்கு ஈட்டித் தரும் வெளிநாடுகளில் தொழில் புரியும் ஆயுதம் ஏந்தாத வீரர்களே என்றும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’