வடக்கு கிழக்குப் பகுதிகளில் இதுவரையிலும் 3 இலட்சத்து 7 ஆயிரத்து இருநூறு மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் 1,872 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற் றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளõர். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்த மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளில் உள்ளூர் அமைப்புக்களுடன் சர்வதேச அமைப்புக்கள் பலவும் இணைந்து செயற்பட்டுவந்துள்ளன. ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் முகமாலை மற்றும் ஆனையிறவு, பரந்தன் வரையி லான ஏ9 வீதியிலும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’