வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிடுவதற்கு 15 ஆயிரம் வேட்பாளர்கள் விண்ணப்பம்

திர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் மும்முரமான முறையில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 15000 க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சுமார் 5000 பேரை தெரிவு செய்யவுள்ளோம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. யும் வன்னி மாவட்டத்துக்கு சுவõமி நாதன் எம்.பி. யும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சசிதரனும் பொறுப்பாளர்ளாக நியமிக்க்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று விபரிக்கையிலேயே அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கூறியதாவது உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பான மாவட்டமட்ட வேட்பாளர் தெரிவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பல்வேறு குழுக்கள் இவை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து ஆறு நாட்களுக்கு கட்சியின் தேசியமட்ட வேட்பாளர் தெரிவு குழு வேட்பாளர் தெரிவில் ஈடுபடவுள்ளது. தெரிவுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் நிறைவுபெற்றதும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறந்த முறையில் அங்கு தேர்தலுக்கு தயாராகும் பணிகளை மேற்கொண்டுவருகின்றார். அத்துடன் அம்மாவட்டத்தில் அதிகமானோர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட ஆர்வமாகவுள்ளனர். வன்னி மாவட்டத்துக்கு பொறுப்பாக சுவாமிநாதன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் நோக்கில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சுமார் 5000 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமானதும் ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்ட ரீதியில் தேர்தலுக்கு தயõராகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’