ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடந்தது.
ரஜினி-லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. ரஜினிக்கு நாளை மறுதினம் 61 வயது பிறக்கிறது. 60-ம் கல்யாணத்தை பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் சேர்ந்து நடத்துவது மரபு. இதன் மூலம் தம்பதியருக்கு ஆயுள் அதிகருக்கும் என்பது இந்து மத நம்பிக்கை. திராவிட இயக்கங்கள் இதனை மணிவிழா என அழைக்கின்றன. சமஸ்கிருதத்தில் சஷ்யப்தபூர்த்தி என்கிறார்கள்.
ரஜினி - லதா மணிவிழா நிகழ்வுகள் இன்று அதிகாலையிலிருந்தே ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் துவங்கின. மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்புப் பூஜைகள் மற்றும் ஹோமத்துடன் தொடங்கின நிகழ்ச்சிகள்.
தாலி கட்டினார்...
60-ம் கல்யாணத்தையொட்டி ரஜினி பட்டு வேட்டி-பட்டு சட்டை அணிந்திருந்தார். லதா பட்டுச்சேலை உடுத்தி இருந்தார். இருவரும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.
நிகழ்ச்சியில் ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், பேரக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்று வாழ்த்தினர். அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’