வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 டிசம்பர், 2010

நக்கீரன் இணையாசிரியர் காமராஜ்-ஜெகத் கஸ்பார் வீடுகளிலும் ரெய்டு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜாவுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடந்தது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடந்தது. இந்த வீட்டில் கடந்த வாரமும் சோதனை நடைபெற்றது.
அதேபோல ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரிமணியம், பெசன்ட் நகரில் உள்ள நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பிரபல மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாகியுள்ளன.
இதில் காமராஜ், ராஜாவின் நண்பர் என்பதால் சோதனை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ராஜா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டியிலும் ரெய்டு நடந்து வருகிறது.
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரில் உள்ள ராஜாவின் சகோதரி விஜயாம்பாள், சகோதரர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இங்கு தலா 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது.
பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்ஷாவின் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட100க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
அரியலூரில் ராஜாவின் சகோதரர் வீட்டிலும் ரெய்டு
அதேபோல அரியலூரில் உள்ள ராஜாவின் அண்ணனான கலியபெருமாள் வீட்டிலும் இன்று சோதனை நடந்தது.
ஐடிசியின் முகவராக செயல்படுகிறார் கலியபெருமாள். மேலும் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா நடத்தி வரும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தில் இவருக்கும் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.
இன்று மதியம் 2.20 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் நால்வர் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஏதும் சிக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’