வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு; பேரா.சிவத்தம்பி ஆரம்ப உரை

ர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஜனவரி 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குப் பேராளர் பதிவுடன் ஆரம்பமாகும் இம்மாநாட்டில் ஆய்வரங்குகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பேராசிரியர் கா.சிவத்தம்பின் உரையுடன் ஆரம்பமாகவுள்ளது. முதல் நாளான 6ஆம் திகதியன்று காலை ஆரம்ப விழாவும் மாலை கணினி வலைப் பதிவு பற்றிய ஆய்வரங்கும் நடைபெறவுள்ளன. ஏனைய மூன்று தினங்களிலும் காலை 8.30 மணி முதல் ஆய்வரங்குகள் நடைபெறும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், நிகழ்த்து கலைகள், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ், சிறுவர் இலக்கியம், மகளிர் மற்றும் பல்துறை ஆகிய பிரதான பிரிவின் கீழ் ஆய்வரங்குகள் நடைபெறும்.
ஆய்வரங்குகளில் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுவார்கள்.
கொழும்பு தமிழ் சங்கத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இவ்வரங்குகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேராளர்களும் பார்வையாளர்களும் தமக்கு விருப்பமான எந்த ஒரு அரங்கிலும் ஆய்வுக் கட்டுரைகளை செவிமடுக்க முடியும். ஆய்வுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் கேட்டுத் தெளிவு பெற முடியும்.
மூன்று கலந்துரையாடற் களங்களில் படைப்பாளிகள் உரை நிகழ்த்துவார்கள். அந்தந்தக் களத்தில் உரை நிகழ்த்தப்படும் தலைப்புத் தொடர்பாகப் பேராளர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மாலை நேரங்களில் தினமும் 5.00 மணி தொடக்கம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இசை, நாடகம், நாட்டியம் ஆகியன இந்நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு எழுத்துலக முக்கியஸ்தர்களும் உரை நிகழ்த்துவார்கள்.
இறுதி நாள் நிகழ்ச்சிகள் வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் அரங்கில் நடைபெறவுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஒரு சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’