இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உட்பட 7 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இக்குழுவினர், இலங்கை அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
'இன்று அதிகாலை அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறுபட்ட அதிகாரிகளுடன் 3 நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என டெய்லி மிரர் இணையத்தளத்திடம், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
பிரதீப் குமாரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பில் கூட்டுறவு மற்றும் உறவில் முன்னேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் ஜுன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, பாதுகாப்புத் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’