வி க்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியான இலங்கை தொடர்பான தகவல் பரிமாற்றக் குறிப்புகள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸிடம் வெளிவிவகார அமைச்சர் இன்று கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை அமெரிக்கத் தூதுவரை சந்தித்த அமைச்சர் பீரிஸ், வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல் பரிமாற்றங்களில் (கேபிள்) கள யதார்த்தத்துக்கு மாறான பெரும் பிழையான குற்றச்சாட்டுகள் அடங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, சிறுவர்கள் முகாம்களில் வேலைசெய்வதற்கும் சிறுமிகள் விபசாரத்திற்கும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளர். இத்தகைய பொய்யான கதைகள் இலங்கையை மதிப்பிழக்கச் செய்வதற்காக புனையப்பட்டவை எனவும் உறவுகளை கட்டியெழுப்பும், புரிந்துணர்வை ஊக்குவிக்கும் ராஜதந்திர நேக்கங்களுக்கு மாறானவை என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் எதிர்காலத்திலேனும் இவ்விடயம் மிக விழிப்புணர்வுடன் கையாளப்படுவது உகந்ததாகும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’