வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 31 டிசம்பர், 2010

'ஐ.நா. நிபுணர் குழு பேசப்போவது நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரமல்ல'

.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்தால் அக்குழு பேசப்போவது இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரமல்ல என ஐ.நா. மீண்டும் தெரிவித்துள்ளது.

இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பிய மின்னஞ்சல் மூலமான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் இதைத் தெரிவித்துள்ளார்.
"அப்போது நான் கூறியபடி, இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரம் இந்நிபுணர் குழு பேசும் என்றில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் பேசுவதைவிட இக்குழுவின் பணி விஸ்தாரமானது. இவ்வளவையும்தான் நாம் இப்போது கூறமுடியும்'" என ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக மாத்திரமே இலங்கை தொடர்பாக ஆலோசனை கூறுவதற்கு நியமிக்கப்பட்ட, ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்படும் என அரசாங்கம் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’