தமிழ் அரசியல் தலைவர்கள் தமது அரசியல் மாட்டு வண்டியாக தமிழ் இளைஞர்களை பயன்படுத்தினார்கள் என இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய கொழும்பு அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த ஹட்சன் சமரசிங்க,
"தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் நாடளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றிவிட்டு வெளிநாடு செல்கின்றனர்.
சில வெளிநாட்டு ஊடகங்கள் பணத்திற்காக நாட்டின் கலாசார பாரம்பரியங்களை கொலை செய்கின்றன.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் வெகுஜன ஊடகங்களின் ஊடாக நாட்டின் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’