அண்மையில் சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோவில் இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட பெண்களின் உடல்களில் ஒன்று, விடுதலைப் புலிகளுக்காகப் பணியாற்றிய பத்திரிகையாளர் இசைப் பிரியாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
விடியோவின் 4.13 நிமிடத்தில் இருந்து 4.46 நிமிடத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காட்சியைக் காண முடிவதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’