வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

2ஆவது இராணுவ நீதிமன்ற வழக்கின் சகல பிரதிவாதிகளுக்கும் அழைப்பாணை

ரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கின் அனைத்து பிரதிவாதிகளையும் ஜனவரி 20ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அழைப்பாணை விடுத்தது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் தன்னை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கியதை எதிர்த்து முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணைகோரும் மனு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேஜர் ஜெனரல் எம்.பி.பீரிஸ் மேஜர் ஜெனரல் எஸ்.டப்ளியூ.எல்.தௌலகல மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதி சொலிஸிடர் ஜெனரல் ரியர் அட்மிரல் டப்ளியூ.ஜே.எஸ்.பெர்னாண்டோ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இராண்டாவது நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கடூழிய சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’