வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 டிசம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்கள் 160 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு

ல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு பின்னர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பொதுமக்களுடன் வாழ்ந்து வந்த 160க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொழும்பு நீதிவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பொதுமக்களுடன் மறைந்து வாழ்ந்த போது இவர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளின் போது இவர்கள் புலிகளிடம் பயிற்சி பெற்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவைத்த புலிச் செயற்படுனர்கள் என்று தெரியவந்தது.
இவர்கள் பின்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு செயலாளரின் கட்டளையின் பிரகாரம் அவர்களைத் தடுத்து வைத்து விசாரித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர்களுக்கான தடுப்புக் காலம் முடிந்த பின் கொழம்பு மேலதிக நீதிவான் முன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணைகள் முடியாதபடியால் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’