வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மரபுகளை உடைத்து ஒபாமாவை விமான நிலையத்தில் வரவேற்ற மன்மோகன்

ரண்டு நாள் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று பிற்பகலில் டெல்லி வந்தார்.
மரபுகளை எல்லாம் உடைந்தெறிந்துவிட்டு அவரை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேரில் வந்து வரவேற்றார்.

நேற்று முன் தினம் மும்பை வந்த ஒபாமா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, இன்று தனது மனைவி மிஷேல் மற்றும் குழந்தைகளுடன் டெல்லி வந்தார்.
அவரை பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குருசரன் சி்ங்குயுடன் வந்து விமான நிலையத்தில் வரவேற்றார். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பது இல்லை.
ஆனால், ஒபாமாவுக்காக அந்த மரபை உடைத்துவிட்டு வந்தார் பிரதமர்.
இன்றிரவு தனது இல்லத்தி்ல ஒபாமா குடும்பத்தினருக்கு விருந்தளிக்கிறார் மன்மோகன் சிங்.
வாரன் ஆண்டர்சன்-ஒபாமாவிடம் வலியுறுத்த கோரிக்கை:
இதற்கிடையே போபாப் விஷ வாயு சம்பவத்துக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங்
வலியுறுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
போபாலில் 1984ம் ஆண்டு டிசம்பர் 2, 3ம் தேதிகளில்
நிகழ்ந்த விஷ வாயுக் கசிவு சம்பவத்தில் 15,000 பேர்
உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் மருத்துவ
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன்,
தொடர்ந்து வழக்கை சந்திக்காமல் தப்பித்து வருகிறார். இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தபோது, இந்தியாவிலிருந்து ஆண்டர்சன் தப்பிக்க வசதியான வழியை அப்போதைய அரசு
ஏற்படுத்தித் தந்தது.
இதனாலேயே 1984ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சோக
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் கால
தாமதமாகிறது.
இப்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இது தொடர்பாக அவரிடம் பேசுவதற்கு உரிய நேரம் இது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவரிடம் பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவது
தொடர்பாக ஒபாமாவிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும். வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற மத்தியப் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் மன்மோகன் சி்ங் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’