ந நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள குசாரிஷ் திரைப்படத்திற்கு மகளிர் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குசாரிஷ் படத்தில் மேஜிக் கலைஞரின் வாழ்வு காதல் மற்றும் சோகம் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிருத்திக் ரோஷன் கதாநாயகனாவும், ஐஸ்வர்யா ராய் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. குசாரிஷ் திரைப்படத்தின் ஒரு காட்சியில் கிருத்திக் உடன் இணைந்து ஐஸ்வர்யாவும் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்திய மகளிர் மத்தியில் ஏற்கனவே புகைப் பிடிக்கும் மோகம் அதிகரித்துள்ள நிலையில், குசாரிஷ் படத்தில் வரும் காட்சிகளையடுத்து, புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், புகைக்கும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவது எனது கையில் இல்லை. புகை பிடிப்பது போன்ற காட்சி நீக்கப்படுமா என்பது எனக்கு தெரியாது. சித்தார்த் கபூர் ராய் தான் இதற்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. படப்பிடிப்புக்காக நான் அதுபோன்று செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு மோசமான தருணம். புகை பிடிக்க தொடங்கியதும் நான் இருமத் தொடங்கி விட்டேன். அதன்பிறகு புகைப் பிடிப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’