முதலாவது இராணுவ நீதிமன்றம், தன்னை கேவலப்படுத்தி பதவிநீக்கம் செய்யும்படி அளித்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ஆணைகோரும் விண்ணப்பம் தொடர்பில் டிசம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் குழாமில் ரோஹிணி மாரசிங்க, உபாலி அபயரத்ன ஆகியோர் அடங்கியிருந்தனர். இவ்வழக்கின் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்க, மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர்.விஜயதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி.ஜயதிலக மற்றும் சொலிஸிட்டர் ஜெனரல் டபிள்யூ.ஜே.எஸ்.பெர்னாண்டோ, சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
சரத் பொன்சேகாவின் வழக்குரைஞரான ரொமேஷ் டி சில்வா பிரதிவாதிகள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட வேண்டுமென்பதற்கு 5 காரணங்களை காட்டினார்.
வேறொரு ஆணைகோரும் விண்ணப்பத்தின்போதும் பிரதிவாதிகள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இல்லாதபோது, இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டமை.
இராணுவ சட்டத்திற்குள் அமைந்தாலும் கூட, விகிதாசார சட்டத்தின்படி இராணுவ நீதிமன்றின் தண்டனை செல்லுபடியற்றது.
இராணுவ சேவையிலிருந்து விலகி, படையதிகாரிகளின் பிரதானியாக இருந்தபோது தனது அரசியல் ஈடுபாடு பற்றி இருவருடன் தொலைபேசியில் பேசினார். இது குற்றமா? இது குற்றமாக இருந்தாலும் இவரது ஜெனரல் பட்டத்தைப் பறிக்க முடியாது.
தண்டனை உறுதி செய்யப்பட்டதே அல்லாமல் தீர்ப்பு உறுதி செய்யப்படவில்லை.
தலைமை நீதிபதி ரோஹிணி மாரசிங்க தீர்ப்பு இடைக்காலத்திற்கானதெனவும் அது உறுதி செய்யப்பட்ட பின்னரே வலுவுடையதாகும் என்றார்.
சரத் பொன்சேகா மீது, முதலாவது இராணுவ நீதிமன்றத்தினால் துரோகம், விசுவாசமின்மை, பணிவின்மை ஆகிய குற்றங்கள் காணப்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’