வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது : பிரதமர்

னைய நாடுகளை விட இலங்கைக்கு இந்தியாவின் மீதே கூடுதலான நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த நம்பிக்கையும் நீண்ட நாள் நட்புறவும் ஒரு போதும் பாதிப்படையக் கூடாது. மலையக மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் இலங்கையர்களேயாவர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் பிரதமர் டி. எம். ஜயரத்ன எடுத்துக் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் உட்பட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஜயரட்ணவை சந்தித்துப் பேசினர். இதன் போது மேற்கண்டவாறு பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பு தொடர்பாக பிரதமர் தெளிவுபடுத்துகையில்,
இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரும் அவரது குழுவினரும் என்னுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு இலங்கை இந்திய நீண்ட நாள் நட்புறவு தொடர்பாகவும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் சிறந்த கலாசார பின்னணியை கொண்டவர்கள். இலங்கையில் தமிழர்கள் அரசியல் உள்நோக்கங்கள் காரணமாகப் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களின் ஒற்றுமைக்காகவும் அப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்தியா முழு ஈடுபாட்டுடன் செயற்படும். அத்தோடு தேரிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். இதன் போது வடக்கு கிழக்கு மக்களுக்காக முன்னெடுக்கப்படும் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கையினை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. கடந்த கால யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் மூன்று இலட்சம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் விசேட இணக்கப்பாட்டுடனான வேலைத் திட்டங்களை இந்தியா முன்னெடுக்க உள்ளது. இதற்கு அமைவாக யாழ். மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இந்திய தூதரகங்களை திறந்து வைக்கவுள்ளதாகவும் கிருஷ்ணா கூறினார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென வெளிவிவகார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். மலையக மக்கள் குறித்து பேசப்பட்ட போது மலையக மக்கள் இந்திய வம்சாவளியினர் அல்ல. அவர்கள் இலங்கையர்கள் என்று நான் எடுத்துக் கூறினேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’