இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவுக்கு, ட்ரான்பரன்ஸி இண்டர்நேஷனில் அமைப்பின் நேர்மைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்த போத்தல ஜெயந்த கடந்த ஜூன் மாதம் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்திருந்தார். அதன் பின் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
இந்நிலையில் போத்தல ஜெயந்தவுக்கு சர்வதேச விருதொன்று வழங்கப்படுகிறது.
'இலங்கையின் அரச ஊடகத்தில் பணியாற்றிய போது ஊழல்களுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் என்னால் போராட முடிந்தமை குறித்து மகிழ்வடைகின்றேன். ஆனால் அதன் விளைவாக நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது, கவலையளிக்கிறது என போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார். சுமார் 214 நாடுகளை சேர்ந்த 1,200 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட விருது வழங்கும் விழா நேற்று பேங்கொக்கின் ஷ்ரிகித் நேஷனல் கன்வென்ஷன் செண்டரில் இடம்பெற்றது.
போத்தல ஜெயந்தவினால் கலந்துகொள்ள முடியாது போனதால், அவருக்கு பதில் விருதினை இயக்குனர் ஜேசி வெலி அமுன பெற்றுக்கொண்டார். 2000ம் ஆண்டிற்கான நேர்மைக்கான விருது சண்டே லீடர் பிரதான ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’