தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கானவை எனக் கூறி இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிதிகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்தும் அவை செலவிடப்பட்ட விதம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை, கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குத் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒருவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைப்பதற்காக கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டனர்.
முத்தையாபிள்ளை விக்னேஸ்வரன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர் எனவும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் இது தொடர்பான அறிக்கையை நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’