வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 நவம்பர், 2010

ராஜ் ராஜரட்ணம் மீதான வழக்கில் உரையாடல் பதிவுகளை வழக்குத் தொடுநர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி

லங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கில் அவரின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாவை பயன்படுத்துவதற்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு விதிமுறைகளை மீறும்விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டார் என ராஜ் ராஜரட்ணம் மீது அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவை வழக்குத் தொடுநர்கள் பயன்படுத்துவதற்கு ராஜரட்ணம் தரப்பு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்த ஆட்சேபனையை நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிபதி ரிச்சர்ட் ஜே. ஹோல்வெல் நேற்று புதன்கிழமை நிராகரித்துள்ளார்.
இத்தீர்மானம் வழக்குத் தொடுநர் தரப்புக்கு கிடைத்த பெரும் வெற்றியொன்றாக கருதப்படுகிறது.
அத்துடன் எதிர்காலத்தில் நிதிமோசடி விசாரணைகளின்போது கணினி, செல்லிட தொலைபேசிகள் போன்றவையும் கண்காணிக்கப்படுவதற்கு இத்தீர்மானம் வழிவகுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’