வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 நவம்பர், 2010

பியசேன எம்பியை கட்சியில் இருந்து நீக்கவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

மிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் பியசேன எம்பியை இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பியசேன எம்பியை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பியசேன எம்பி தொடர்பான விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
எனவே பியசேன எம்பியை அவ்வாறு கட்சியில் இருந்து நீக்குவதாயின் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 08 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன ஆதரவாக வாக்களித்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அரசியல் அமைப்புக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில் பியசேன எம்பி 18 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்தமை தொடர்பாகவும் அவரின் கட்சி உறுப்புறுமை தொடர்பாகவும் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’