இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் இன்பத் தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது,
இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கான தேர்தலை இந்தியாவிலும் நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நடத்ததுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் .
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெளியை நிரப்பபும் முயற்சியே நாடுகடந்த தமிழீழ அரசு எனவும் அதன் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் சனநாயகத்தின் பண்பியல்புகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
எனினும் எமது பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகளாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
தற்போது தமிழர்களை தாயகத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு அமைப்புகளுடனோ வெளிப்படையான உறவுநிலையை பேண முடியாது.
எனினும் தாயகத்தில் உள்ளவர்களினதும் புலத்தில் உள்ளவர்களினதும் இலக்கு ஒன்றாக இருக்கும்போது தனித்தனியாகவே அந்த இலக்கை நோக்கி நகரமுடியும், என்று தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’