இலங்கை மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் சிறந்த வளர்ச்சி கண்ட முதல்தர நாடுகளின் வரிசைப் பட்டியலில் 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என மனித அபிவிருத்தி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித அபிவிருத்தி சுட்டெண் 0.659 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. 1980ஆம் ஆண்டு மனித அபிவிருத்தி சுட்டெண் 0.513 ஆக காணப்பட்டது.
169 நாடுகளுக்கிடையில் சுகாதாரம், கல்வி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கொண்டு மனித அபிவிருத்தி சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளது.
மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் உச்ச நிலையில் உள்ள நாடுகள் நோர்வே, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
நைஜீரியா, கொங்கோ மற்றும் சிம்பாப்வே ஆகியன மனித அபிவிருத்தி சுட்டெண் குறைந்த நிலையில் உள்ள நாடுகளாகும் என 2010 ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டெண் அறிக்கை தெரிவிக்கின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’