கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வருட கற்கைத் தடைக்குட்படுத்தப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒழுக்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வர்த்தக பீட மாணவி ஒருவரை செவ்வாய்க்கிழமை பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவி அடங்கலான 5 மாணவர்களுக்கும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவருக்கும். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாந்த இசை நடனக் கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மோதல் தொடர்பில் விசாரணைக்கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த 7 மாணவர்களுக்கும் இந்தக் கற்கைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று, வர்த்தக பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவியைப் பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவன் மற்றும் 4 மாணவிகளுக்கும் விசாரணைகள் முடியும் வரை வகுப்புத் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்ததது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் காரணமாக வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் காலை 10.00 மணிமுதல் விசாரணைகள் நடைபெற்று நேற்று மாலை இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’