க ண்டி - மாத்தளை வீதியில் வான் ஒன்றினை வாடகைக்கு எடுத்துச் சென்ற கோஷ்டியொன்று கட்டுகஸ்தோட்டை, யஹலதென்ன காட்டுப் பகுதியில் வைத்து வானின் சாரதியை மரத்தில் கட்டிவிட்டு குறித்த வானை கடத்திச் சென்றுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்திய கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்படி வானைக் கண்டுபிடித்ததுடன் அதனைக் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன் யஹலதென்ன காட்டுப் பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த வானின் சாரதியையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’