முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்து வருகிறது. ஹிட்லரின் ஆட்சிபோலவே இலங்கை அரசின் ஆட்சியும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய மங்கள சமரவீர...
முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்து வருகிறது.
இச்சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு லட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
1933ஆம் ஆண்டு ஹிட்லருக்கு எதிராக மக்கள் எழும்போது, ஹிட்லர் அரச அதிகாரங்களை கைப்பற்றினார். அதுபோல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.
அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டெம்பர் 8ஆம் திகதியாகும். எனவே நவம்பர் 8ஆம் திகதிக்கு இரண்டு மாதம் பூர்தியாகின்றது. அன்றும் நாடளாவிய ரீதியில் ஓர் ஆர்பாட்டம் செய்யவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசெம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசெம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப்பட்ட தினத்தை நினைவு கூறுவதுடன், மாபெரும் போராட்டம் ஒன்றையும் நடத்தி, சரத் பொன்சேகாவை மீட்டெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’