ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் உயர்கல்வி அமைச்சு வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஐந்து ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டைய காண்பித்த பின்னரும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்திய பொலிஸார் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் சட்டவிரோதமாக செயற்படும் வரையில் இவ்வாறான துரதிஸ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதனை கட்டுப்படுத்த முடியாது என ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’