வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இன, மத, மொழி பேதமின்றி சமமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை: சரத் ஏக்கநாயக்க

ற்போதைய அரசு இன மத மொழி பேதமின்றி அனைவருக்கும் சமமான கல்வியை வளங்குவதற்கு நடவடிக்கை எடு;துள்ளது. இருப்பினும் மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறை காரணமாகவே முஸ்லீம் மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்று காலை அக்குறணை குருகொடை முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இங்கு மேலும் உரையாற்றிய முதலமைச்சர்,

மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் பாரியளவு ஆசிரியர் குறைபாடுகள் காணப் படுகின்றன. அதே நேரம் புதிதாக ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாத ஒரு நிலையும் உள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் யுவதிகள் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிப்பது மிகவும் குறைந்த மட்டத்திலே உள்ளது.
தற்போதைய அரசாங்கம் சாதி இன மத பேதமின்றி அனைவருக்கும் சமமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடு;துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கணனிக் கூடங்களை வழங்கி வருகின்றோம் என்றும் அவர் இங்கு கூறினார்.
குருகொடை முஸ்லிம் வித்தியாலயத்துக்காக 27 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய கணனி அறையையும் முதலமைச்சர் இங்;கு திறந்து வைத்தார்.
குருகொடை முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து 2010 ம் ஆண்டு 5 ம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மற்றும் 100 ற்;கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசில்களும் சான்றிதல்களும் இங்கு வழங்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’