வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 அக்டோபர், 2010

தாயின் அரவணைப்பை இழந்த வங்கப் புலிக்குட்டி மரணம்

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன் பிறந்த வங்காளப் புலிக்குட்டியொன்று இன்று உயிரிழந்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய விலங்கியல் பூங்கா அறிவித்துள்ளது.

இம்மரணத்தற்கான காரணத்தை அறிவதற்கான பிரேதப் பரிசோதனை நடைபெறுவதாக தேசிய விலங்கியல் பூங்கா பிரிவுப் பணிப்பாளர் பஸ்வர குணரட்ன தெரிவித்தார்.
இப்புலிக்குட்டி அதனது தாயிடமிருந்து தாய்ப்பாலை பெறாமையே இம்மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என மிருகவைத்திய நிபுணர் டாக்டர் ஜகத் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இப்புலிக்குட்டிக்கு பாலூட்ட அதனது தாய் மறுத்ததையடுத்து அதை காப்பாற்றுவதற்கு அதிகாரிகள் கடும்முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’