திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் மாணவர் விடுதி இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.செல்வநாயகம் தலமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன்,
இவ் உலகில் எதனையும் எம்மால் சாதிக்க முடியும் அதற்கு மிகவும் முக்கியமாது கல்வி ஆகும். எனவே கல்வி என்கின்ற பலம் எம்மிடம் இருக்குமானால் நாம் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இவ்வாறான அளவற்ற கொடையான கல்வியினை கற்கவேண்டுமானால் சூழல் மிகவும் முக்கியமாக அமைய வேண்டும். சூழல் என்கின்ற போது கற்பதற்கான வசதிகள் செவ்வனே ஏற்பட்டிருக்க வேண்டும். அதில் ஓர் அங்கம் தான் இவ் விடுதியும் கூட,
எனவே இன்று திறந்து வைக்கப்பட்ட மாணவர் விடுதியினை சரியாக மாணவர்கள் பயன்படுத்தி நல்லதோர் கல்வி நிலையினை எட்டுவதற்கு இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் இதற்கு முதலமைச்சர் என்ற வகையில் என்னாலான அனைத்து உதவிகளையும் புரிவேன் அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர்ப்பெரியார்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆனந்தராஜா பிரதம பொறியியலாளர், மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் ஏனைய பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’