மும்மொழிக் கொள்கையை மேலும் விருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இதற்காக, மொழிகளுக்கிடையிலான வித்தியாசங்களை கையாள்வதில் இந்திய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்காகவும் இந்தியாவின் மொழிக்கொள்கையை விளக்குவதற்கும் இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சு இலங்கைக்கு விரைவில் நிபுணர்களை அனுப்பவுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபலை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியாவின் மும்மொழிக் கொள்கையின்படி, இந்திய பாடசாலைகளில் மாணவர்கள் ஆங்கிலத்தையும் தமது தாய்மொழியையும், மாநிலத்தில் அதிகமாக பேசப்படும் மற்றொரு மொழியையும் கற்கின்றனர்.
இந்தி மொழி பேசும் மாணவர்கள் இந்தியாவின் மற்றொரு தேசிய மொழியை மூன்றாவது மொழியாக கற்கின்றனர். ஏனைய மாநிலங்களிலுள்ள மாணவர்கள் இந்தியை மூன்றாவது மொழிப்பாடமாக கற்கின்றனர்.
"இம் மும்மொழிக் கொள்கையின் அடிப்படை ஒவ்வொரு பிள்ளையும் தனது தாய்மொழியையும் மற்றொரு தேசிய மொழியையும் கற்பதுடன் நாட்டின் ஏனைய கலாசாரங்களையும் அறிந்துகொள்ள உதவுவதை உறுதிப்படுத்துவதாகும்" என இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது மொழி பொதுவாக இடைநிலை பாடசாலை மட்டத்தில் கற்பிக்கப்படுகிறது" எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கு அடிப்படை சிங்களத்தையும் சிங்கள மக்களுக்கு அடிப்படைத் தமிழையுமாவது கற்பிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோழி அரசியலை எதிர்கொள்வதன் அனுபவத்தையும் இந்தியா பகிர்ந்துகொள்ள முடியும் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’