வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 அக்டோபர், 2010

'இராணுவத் தளபதியாக பதவியேற்றதிலிருந்து ஆட்சியை கைப்பற்ற முஷாரப் திட்டமிட்டிருந்தார்'

பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து நவாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஜெனரல் பர்வேஸ் முஷாரவ் திட்டமிட்டிருந்தார் என ஜெனரல் ஸியாவுதீன் பட் தெரிவித்துள்ளர். இவர் நவாஸ் ஷெரீப்பினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
.12.10.1999 ஆம் திகதி ஜெனரல் முஷாரவ், நாவஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். அந்நிகழ்வின் 11 ஆவது ஆண்டு நிறைவுதினம் இன்றாகும். இந்நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி ஸியாவுதீன் பட் இந்த இத்தகவலை வெளியிட்டுள்ளார். ஸியாதீன் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட தினத்திலேயே முஸாரப்பின் இராணுவப் புரட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஸியாதீன் கைது செய்யப்பட்டு இரு வருடகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
"ஓக்டோபர் 12 ஆம் திகதியை அண்மித்த நாட்களில், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இரகசியமானதொன்றாக இருக்கவில்லை. ஜெனரல் முஷாரப்பும் அவர்களின் சகாக்களும் ஆட்சியைக் கைப்பற்றுவர் என்பது எனக்குத் தெரியும்.
ஜெனரல் முஷாரவ் இராணுவப் பிரதம படையதிகாரியாக பதவியேற்ற 1998 ஒக்டோபரிலிருந்து அவரிடம் இத்தகைய திட்டம் இருக்கிறது என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் அறிந்திருந்தேன்' என ஜெனரல் ஸியாவுதீன் பட் கூறியுள்ளார்.
கார்கில் யுத்தத்தின் பின்னர் முஷாரப்புக்கும் நவாஸ் ஷெரீப்பும் இடையிலான முரண்பாடுகள் ஆரம்பித்தன. அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி முஷாரப் கார்கில் யுத்தத்தை ஆரம்பித்தார்.
அதன்பின் தனிப்பட்ட சந்திப்புகளின்போது ஷெரீப்பை முஸாரப் திட்டிப் பேசத் தொடங்கினார். அவமரியாதையான வார்த்தைகளில் முஷாரப் திட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோவொன்று புலனாய்வுத் துறையினரால் பிரதமர் ஷெரீப்புக்கு வழங்கப்பட்டது.
12.10.1999 ஆம் திகதி முஷாரப் முல்தான் நகருக்கு விஜயம் செய்ய ஆயத்தமான போது நம்பகமான வட்டாரமொன்றிலிருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அதுவே முஷாரப்பை இராணுவத்தளபதி பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு வர வழிவகுத்தது" என ஜெனரல் ஸியாவுதீன் பட் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’