ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய சதி செய்ததாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களும் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்
.சிவராசா சுபகிருஷ்ணன், தவராஜசிங்கம் சுபாஷ் மற்றும் லிங்டன் ஆகிய மூவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி நேற்று இவர்களை விடுதலை செய்தார்.
இக்குற்றத்தினை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அமைச்சரும் முன்னாள் ஐதேக உறுப்பினருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் பெயரையும் இரகசிய பொலிஸார் சந்தேக நபர்களின் பட்டியலில் முன்னர் உள்ளடக்கியிருந்தனர்.
பின்னர் அவரின் பெயரை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’