இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தலை மன்னாருக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இடையில் இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் வர்த்தகக் கப்பல் பிரிவு பொறுப்பாளர் சாந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’