வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து 5 வைத்தியர்கள் வெளியேறினர்

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து நான்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் உட்பட ஐந்து வைத்தியர்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி, தமக்கு விடுத்த அச்சுறுத்தலின் பேரிலேயே தாம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் செல்வதாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெரும்பான்மை இன டாக்டர் கிரிசாந்த தெரிவித்தார்.
வெளியேறிச் செல்லும் நான்கு வைத்தியர்களும் நாளை சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரை சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான கிரிசாந்த, துல்மினி, நிமிர, மற்றும் அசோக்குமார் ஆகிய வைத்தியர்களே வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’