வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 அக்டோபர், 2010

ராதிகாவின் '38 ஸ்டெப்ஸ்'!

ராதிகா சரத்குமார் அறிமுகப்படுத்தும் '38 ஸ்டெப்ஸ்'!
'மன்னா... என்னா...' அல்லது 'வாயில நுழையற மாதிரி பேரு, வாழைப் பழம்' போன்ற அரதப் பழசான அல்லது கடி ஜோக் நாடகங்களிலிருந்து மக்க்களைக் காப்பாற்றும் புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராதிகா சரத்குமார்
.சித்தி மூலம் மெகா சீரியல் இலக்கணத்தையே மாற்றி எழுதியவரல்லவா...!
100 பேர் நடிக்க வேண்டிய ஒரு முழு நீள நாடகத்தை வெறும் 4 பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு சொல்லும் ஒரு அபார, அதே நேரம் நவீன நாடக முறையை அவர் அறிமுகப்படுத்தவிருக்கிறார், ஏவாம் குழுவினருடன் இணைந்து.
கிட்டத்தட்ட மேடையிலேயே முழு சினிமாவை அதன் த்ரில்களோடு பார்க்கும் அனுபவத்தை இந்த நாடகங்கள் தரும். சினிமாவில் வருவது போன்ற கார், பைக் சேஸிங் மட்டுமல்ல, பெரிய ரயில் சேசிங் கூட நடத்துவார்களாம் மேடையில். ரயில்வே ஸ்டேஷன், பேப்பர் மற்றும் பாப்கார்ன் விற்கிற ஆட்கள், பயணிகள், ரயில் கொள்ளை, துப்பாக்கி சேஸிங் என்று இந்த நால்வர் மட்டுமே நடத்தும் இந்த டைப் காட்சிகள் மேல்நாடுகளில் படு பிரபலம்.
இந்த மாதிரி நாடகங்களுக்கு 39 ஸ்டெப்ஸ் என்று பெயர்.
இந்த புதிய அனுபவத்தை தென்னிந்தியா முழுவவதிலும் உள்ள ரசிகர்களுக்கு தரப்போகிறார்களாம்.
முதல் கட்டமாக வரும் அக்டோபர் 29, 30 மற்றும் 31 தேதிகளில் சென்னை வேங்கட சுப்பாராவ் கலையரங்கில் நடத்தப் போகிறார்களாம். டிக்கெட்டுகளுக்கு லேண்ட்மார்க் அல்லது 98404 44916, 98406 13333 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் ராதிகா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’