இலங்கை வெளிவிவகார அமைச்சு நாட்டின் நன்மதிப்பை நிலைநாட்டும் நோக்கிலான பிரசாரப் பணிகளுக்காக 12 மில்லியன் ரூபாவினை செலவிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இலங்கையின் நன்மதிப்பை பிரசாரம் செய்யும் பணி சில நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'அடுவுட் சோர்சிங்' (தூரத்திலிருந்து கடமைகளை மேற்கொள்ளல்) என்னும் முறையின் அடிப்படையில் குறித்த நிறுவனங்கள் இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்தும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காகவா வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்றதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் பணம் தேவையற்ற வழிகளில் வீண் விரயம் செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்தும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக் கூடாது எனவும், பணிகளை வெளிவிவகார அமைச்சர்களே மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’