வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 செப்டம்பர், 2010

தமிழ் மக்களின் அவல வாழ்க்கைக்கு தமிழ் தலைவர்களே காரணம் – ஈரோஸ் தவைவர் பிரபா

மிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் அன்று செய்த தவறின் காரணமாகவே வடகிழக்கிலிருந்து 18 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்ககணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகியுள்ளனர். இவ்வாறு ஈரோஸ் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பபினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பட்டார்
.மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபின்போது அவர் இக்கருத்துகளை முன்வைத்தார்.இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்; எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை கலாசாரம் கல்வி உட்பட வாழ்வாதாரத்திலும் பின்னோக்கியுள்ளது.
அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக்கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது அதனால தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவருகிறது.அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்ல எமக்கு அரசியல் இரண்’டாம் கட்டம்தான் தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பபடவேண்டுமென்பதுதான் எமது இலக்கு கௌரவமான காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும்.அதற்;காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம் . எதிர்காலத்திலும் தேர்தல்களைச்சந்திக்க தயாராகவுள்ளோம்.
நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்றுமாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத்தீர்வாகயிருந்தாலும்;அது தமிழ் பேசும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும் .என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’