வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இலங்கையர் மூவருக்கு மலேஷியாவில் கடூழியச் சிறை

லங்கையர் மூவருக்கு மலேஷியாவில் மூன்றாண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
.ஒரு சிறுவனைக் கடந்த வருடம் கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கையர் மூவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மலேஷிய நீதிமன்றில் நேற்று இவ்வழக்கு விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவர்களுக்குத் தலா மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருகோணமலையைச் சேர்ந்த மேற்படி சிறுவனை, கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரின் செட்டபக் பிரதேசத்தில், ஜலன் லங்வி பகுதியில் உள்ள டெராடி மெவாக் வீட்டுத்தொகுதிக்கு அருகில் வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்யப்பட்ட போது, இவர்கள் த்மது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அந்நாட்டு மேல்நீதிமன்றம் குறைந்த பட்சத் தண்டனை வழங்கி உள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி தடுக் மெஹமட் ஷபிதீன் மொஹத் டயா இத்தீர்ப்பை வழங்கினார்.
இலங்கையர்களான எஸ்.செல்வகுமார்(வயது 32), பி.ஜயநாதன்(வயது 26), ஜே.அந்தோனி(வயது 22) மற்றும் மலேசியரான ரி.ராமு (வயது 22), ஆகியோருக்கே இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’