ஐரோப்பாவின் சில நாடுகளில் காதலர்கள் தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு வித்தியாசமான உத்தியொன்றை கையாண்டு வருகின்றனர்.
இரும்புப் பூட்டுகளில் தமது பெயர்களை பொறித்து அவற்றை பகிரங்க இடங்களில் பூட்டிவிட்டு சாவியை எறிந்து விடுகின்றனராம்.
தமது காதலை ' உடைக்க முடியாது' என்பதை இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்களாம்.
முதன் முதலில் 1980களில் ஹங்கேரி நாட்டில், இந்த வழக்கம் ஆரம்பாகியது. தற்போது பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இது அறிமுகமாகியுள்ளது.
லண்டன் டவர் பிரிட்ஜின் ஒரு பகுதி தற்போது பூட்டுகளால் மறைக்கப்பட்டுள்ளது.
சில காதலர்கள் தமது காதலர்களுக்கான கடிதங்கள் தகவல்களையும் பூட்டுகளில் பொறித்துள்ளனராம்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள மரமமொன்று பூட்டுகளால் சுற்றி மூடப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தில் இத்தகைய பூட்டுகள் அதிகமாக தொங்கவிடப்பட்டுக் காணப்படுவதால் அதிக பாரத்துடன் காணப்படுகிறது.
இதனால் அங்கு பூட்டுகளைத் தொங்கவிடுவதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
லத்வியாவின் ரிகா மற்றும் ஜேர்மனியின் கொலோன்ஜ் நகரிலும் பாலங்கள் இத்தகைய பூட்டுகளால் நிரம்பியுள்ளன.
காதல் பித்தினால் இப்படி பூட்டுகளில் பெயர்களை பொறித்துப்பூட்டிவிட்டு, காதல் முறிந்தபின் அதற்காக வருந்தும் நபர்கள் எத்தனையோ?
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’