பணிப்பெண் ஆரியவதியின் உடலில் ஆணிகள் ஏற்றி துன்புறுத்திய சவூதி அரேபிய தம்பதியினர் மீதான விசாரணை குறித்த விவரங்களுக்காகக் காத்திருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.ஆரியவதியைத் துன்புறுத்திய தம்பதியினர் கடந்த வாரம் ரியாத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களைக் கைதுசெய்தமை குறித்து உறுதி செய்யப்படவில்லை என ரியாத்திலுள்ள இலங்கைக்கான வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரிச் சங்க ஆளுநர் நிமால் ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டில் சந்தேகம் நிலவுவதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரக அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’